கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் பகுதியில் அமைந்துள்ள ஜெயபுரம் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுவரும் தரம் 11 மாணவி அக்சயா உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இளம் வயதில் கல்வியில் முன்னேற்றம் கண்டுவரும் மாணவியின் இந்த உயிரிழப்பு, குடும்பத்தினரும், நண்பர்களும், ஆசிரியர்களும் உட்பட அனைவரையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அக்சயாவின் இன்முகம், எப்போதும் சிரிப்புடன் பழகும் தன்மை மற்றும் நண்பர்களுடன் இணைந்து கலந்துரையாடும் இயல்பு ஆகியவை அனைவரின் நினைவிலும் நிலைத்து நிற்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துவருகின்றனர். “மனம் ஏற்க முடியாத இழப்பு” எனக் கூறி பலரும் துயரத்தை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே, இச்சம்பவம் இளைஞர்களின் மனநல பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்துகிறது.
வாழ்க்கையில் தோல்விகளும், அவமானங்களும் கடந்து போகும் மேகங்கள் போன்றவை. ஒரு நிமிடம் எடுக்கும் தவறான முடிவு, உன்னை நேசிக்கும் பெற்றோரின் வாழ்நாள் முழுவதும் அழியாத கண்ணீராக மாறிவிடும்.
மனதில் பாரமாக இருந்தால் பேசுங்கள். நண்பர்களிடம் அல்லது உங்களுக்குப் பிடித்தமானவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். இப்படியான எண்ணம் என்பது ஒரு நொடிப் பலவீனம்; அதைத் தாண்டிவிட்டால் ஒரு அழகான வாழ்க்கை காத்திருக்கிறது.
பெற்றோர்களே, உங்கள் பிள்ளை திடீரென அமைதியாக இருந்தாலோ, உணவில் நாட்டமில்லாமல் இருந்தாலோ அல்லது தனிமையை விரும்பினாலோ அதை அலட்சியப்படுத்தாதீர்கள்.
“தோல்விகளிடம் தோற்றுப்போகாதே – உன்னை நேசிக்கும் இதயங்களுக்காகத் தொடர்ந்து போராடு!”
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.





Discussion about this post