நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த போதைப்பொருள் கையிருப்பு வனாத்தவில்லுவ தகன அடுப்பில் அழிக்கப்பட்டது.
நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த போதைப்பொருள் கையிருப்பானது வனாத்தவில்லுவ லக்டோவத்த பகுதியில் அமைந்துள்ள தகன அடுப்பில் (27) அழிக்கப்பட்டது. கடந்த காலத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களில் இருந்து, ஹலாவத்த மற்றும் பலப்பிட்டிய நீதிமன்றங்களில் வழக்குகள் முடிவடைந்தவை இவ்வாறு அழிக்கப்பட்டன.
அதன்படி ஹெராயின் 22 கிலோ 888 கிராம், கேரள கஞ்சா 33 கிலோ 172 கிராம் மற்றும் கஞ்சா 247 கிலோ 940 கிராம் ஆகிய அளவுகள் அழிக்கப்பட்டன.





Discussion about this post