2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்க இதுவரை தீர்மானிக்கவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு முன்மொழிந்தால், அதற்கு கட்சி ஆதரவளிக்கும் என கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் பல சுற்றுப் பேச்சுக்களை நடத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இ.தொ.கா. அரசாங்கத்துடன் இணைந்து ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கலாம் என அறிவித்துள்ளதாக முன்னர் அறிக்கைகள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
Discussion about this post