லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்களை சட்டவிரோதமாக சேகரிக்க முயற்சிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் குறித்து நிறுவனம் பொது எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் முதன்மை எரிவாயு வழங்குநராக இருக்கும் லாஃப்ஸ் கேஸ் நிறுவனம், இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
லாஃப்ஸ் கேஸ் சிலிண்டர்கள் நிறுவனத்தின் சொத்து என்றும், லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி சிலிண்டரை சேகரிக்க, விற்பனை செய்ய , விநியோகிக்க அல்லது அதன் தோற்றத்தை மாற்றுவதற்கு தனிநபர்களுக்கு உரிமை இல்லை என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட அல்லது இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் பற்றிய தகவல்களை அறிய தர பொதுமக்களை 1345 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது











Discussion about this post