வெளிநாட்டு தொழில் வாய்ப்பை பெற்றுத் தருவதாகக் கூறி 77 இலட்சம் ரூபாவுக்கு மேல் மோசடி செய்த நபரை திருகோணமலை விசேட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
திணைக்களத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் என்பதுடன் அவர் இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.




Discussion about this post