இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள குரங்கம்மை நோயாளிகளுக்கு தேசிய தொற்று நோயியல் விஞ்ஞானப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படவுள்ளது..
தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவுவின் பணிப்பாளர் டொக்டர் ஹசித அத்தநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்
இதுவரை இலங்கையில் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை இவர்கள் டுபாயிலிருந்து இலங்கை வந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.
மேலும் குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளை இலகுவாக அடையாளம் காண முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post