புத்தளம் – குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்துடன் கொள்கலன் லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்ட புகையிரதமே குரணை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புகையிரத கடவையில் ஊடாக பயணித்த கொள்கலன் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியது.
இதனால் குரணை – நீர்கொழும்புக்கு இடையிலான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது என புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.




Discussion about this post