தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டில் 677 வீடுகள் அமைத்துத் தருவதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிபுரியும், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற மலையகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் குடியிருப்பு பிரச்சினைகள் குறித்து இம்மாதம் 16ஆம் திகதி இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானால் முதலமைச்சருடைய நேரடி கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இவ்விடயம் குறித்து முழுமையாக ஆராய்ந்து உரிய தீர்வு வழங்குவதாக தமிழக முதல்வர் செந்தில் தொண்டமானிடம் சாதகமாக தெரிவித்திருந்த நிலையில், இன்று TENTEA நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டில் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதற்கு புலம்பெயர்ந்த மலையக மக்கள் சார்பாக இ.தொ.கா தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளது.
Discussion about this post