பயங்கரவாதத்துக்கு நிதி ரீதியிலும், சித்தாந்த ரீதியிலும் பாகிஸ்தானும் சீனாவும் ஆதரவு வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
பயங்கரவாதத்துக்கு கிடைக்கும் நிதியை தடுப்பது தொடர்பான கருத்தரங்கை டெல்லியில் தொடங்கி வைத்து பேசிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
குறிப்பிட்ட சில நாடுகள், பயங்கரவாதத்தை கொள்கையாக ஏற்றுக் கொண்டு, அதனை ஆதரிப்பதாகவும் வேறு சில நாடுகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகின்றன என்றும் நரேந்திர மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே பயங்கரவாதத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைக்காக செலவிடப்படும் நிதியை, அதற்கு ஆதரவு வழங்கும் நாடுகளிடம் இருந்து பெற வழிமுறை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post