ஓமானுக்கான ஆட்கடத்தல் தொடர்பில் அரசாங்க கணக்குகள் தொடர்பான தெரிவுக் குழுவில் விடயங்கள் கோரப்பட்டன.
குறித்த குழு நேற்றிரவு(22) கூடிய சந்தர்ப்பத்தின் போதே இந்த விடயங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த ஆட்கடத்தலுடன் தொடர்புடைய உத்தியோகத்தர் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் முறைப்பாடு கிடைத்த போதிலும், வௌிநாட்டு வேலை வாயப்பு பணியகம் அது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என்பது இதன்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே, சுற்றுலா விசாவில் இலங்கை பெண்களை ஓமானுக்கு அழைத்துச் சென்று ஆட்கடத்தலில் ஈடுபட்டமை தொடர்பில் இதுவரை நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.






Discussion about this post