இலங்கையில் பரவி வரும் புதிய வைரஸ் காய்ச்சல் தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறித்தியுள்ளது.
இந்த வைரஸ் காய்ச்சலால் தினமும் 40 குழந்தைகள் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.






Discussion about this post