சீனுராமசாமி இயக்கியுள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ், நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘இடம் பொருள் ஏவல்’. கடந்த 2014-ம் ஆண்டே வெளியீட்டுக்கு தயரான இப்படம் பொருளாதார பிரச்னையால் நீதிமன்றத்தில் முடங்கியது.
இதனையடுத்து 8 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்நிலையில், யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் எப்போது வெளியாகும் என்ற தேதி குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.
Discussion about this post