நாளை (திங்கட்கிழமை) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்று வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி தீர்மானிக்கவுள்ளதாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நிலவும் காலநிலை காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post