Monday, March 23, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home இலங்கை

புதிய அரசியலமைப்பு தொடர்பில்  முன்னரைப்போலவே  இவ்விடயத்தில் TNA இணைந்து  செயற்படும் எனவும் தெரிவிப்பு

by editor
October 26, 2022
in இலங்கை
0 0
A A
0
புதிய அரசியலமைப்பு தொடர்பில்  முன்னரைப்போலவே  இவ்விடயத்தில் TNA இணைந்து  செயற்படும் எனவும் தெரிவிப்பு
Share on FacebookShare on Twitter

இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பினூடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசியலமைப்பினூடாக இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார். 2016 ஆம் ஆண்டு  ஜனவரியிலிருந்து பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்திலிருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது. அந்த வழிகாட்டக் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம்.

புதிய அரசியலமைப்பு தொடர்பான இரண்டு இடைக்கான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன. 2019 ஜனவரி மாதம் இரண்டாவது இடைக்கால அறிக்கையோடு நிபுணர் குழுவினால் வரையப்பட்ட ஒரு முழுமையான அரசியலமைப்பு வரைவு கூட அப்பொழுது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கமினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து வந்த ஜனாதிபதி தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியின் சார்பாக முன்நின்ற சஜித் பிரேமதாஸவுடைய தேர்தல் அறிக்கையிலே அந்த முயற்சியில் தொடர்ந்து செயற்பட்டு முடிவை எட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டது. 2016 ஆம் ஆண்டு அரசியலமைப்பு பேரவையாக உருவாக்கப்பட்டு பலவித கூட்டங்கள் கலந்துரையாடல்கள் மக்கள் சந்திப்புகள் செய்யப்பட்டு மாகாண சபைகளுடைய பிரதிநிதித்துவத்தையும் பெற்று விசேடமாக தென்பதியிலுள்ள ஏழு மாகாண சபைகளை உள்ளடக்கி வேலை செய்யப்பட்டது. அதனடிப்படையில் தொடர்ந்து முன் சொல்ல ஜனாதிபதி ஆவண செய்ய வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்திலே இந்த வேலை செய்யப்பட்டது. இதனை வெகு விரைவாக தொடர்ந்து முன்னெடுத்தால் ஒரு வருட காலத்திற்குள் இதனை முடிவுக்கு கொண்டு வரலாம். ஒரு வருடம் கூட தேவை இல்லை. அனைவருடைய இணக்கப்பாட்டோடு சகல மக்களுடைய ஆதரவோடு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். ஜனாதிபதியின் கருத்தை வரவேற்கின்ற நேரத்தில் இதற்கு முன்னர் பங்களித்ததை போலவே முழுமையான பங்களிப்பை கொடுப்போம் என்றார்.

Related Posts

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!
இலங்கை

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்
இலங்கை

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு
இலங்கை

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

இரண்டு மணி நேர மின்வெட்டை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை..!

March 21, 2026
”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

”ஈரான் புரட்சிகர காவல்படை வளைகுடா மற்றும் இஸ்ரேலில் உள்ள 55 இடங்களை இலக்கு வைத்து 70-வது கட்டத் தாக்குதலைத் தொடங்கியது.”

March 21, 2026
இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

இந்த வார இறுதியில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படலாம்: சிலோன் பெட்ரோலியக் கூட்டுத்தாபன வட்டாரங்கள் தகவல்

March 21, 2026
நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

நெடுஞ்சாலைகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் ஒத்திவைப்பு

March 21, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version