யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒரு தொகை மஞ்சள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
லொறியொன்றில் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட 2,400 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகியோர் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.






Discussion about this post