முல்லைத்தீவு அலம்பில் பகுதியில் அமைந்துள்ள மாவீரர்களின் மயானம் அமைந்துள்ள காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரும் மற்றும் ஒரு பகுதியை தனியார் ஒருவரும் ஆக்கிரமித்துள்ளனர்.
இதில் குறித்த தனியார் ஆக்கிரமித்துள்ள காணியை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அனந்தி சசிதரன் தலைமையில் 4 பேருந்துகளில் சுமார் 400 பேர் வரையில் குறித்த இடத்திற்கு வந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்
இரு தரப்பிற்கும் இடையில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்களை அடுத்து குறித்த பகுதியில் புதைகுளி அமைந்துள்ள பகுதியை விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.






Discussion about this post