சென்னை : நடிகர் வடிவேலுவின் ரீ-என்ட்ரி கோலிவுட்டில் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. சிராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில்தான் அவர் தன்னுடைய என்ட்ரியை கொடுத்துள்ளார்.
நீண்ட நாட்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு மாமன்னன், சந்திரமுகி 2 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகர் வடிவேலு
காமெடி புயல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் வடிவேலு. இவர் தன்னுடைய சிறப்பான படங்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர். இவரது காமெடிக்காகவே பல படங்கள் சிறப்பான வெற்றியை பெற்றுத் தந்தன. பல முன்னணி நாயகர்களுடன் இவர் தொடர்ந்து நடித்தார். வடிவேலுவின் ரீ-என்ட்ரி இதனிடையே சில தவிர்க்க முடியாத காரணங்களால் இவர் தொடர்ந்து நடிக்க முடியாத சூழல் காணப்பட்டது. இதையடுத்து தற்போது கோலிவுட்டில் தனது பயணத்தை மீண்டும் துவக்கியுள்ளார் வடிவேலு. சுராஜ் இயக்கத்தில் இவர் 4வது முறையாக இணையும் படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். நவம்பர் ரிலீஸ் இந்த படத்திற்கு முன்னதாக நாய் சேகர் என்ற டைட்டிலை வைக்கவே படக்குழு திட்டமிட்டது. ஆனால் இந்த டைட்டிலில் நடிகர் சதீஷ் நடித்து படம் வெளியானதால் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டு தற்போது படம் ரிலீசுக்கும் தயாராகியுள்ளது. படம் வரும் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துப்பறியும் நிபுணராக வடிவேலு
இந்தப் படத்தில் நடிகை ஷிவானி நாராயணன், யூடியூபர் பிரசாந்த், ரெடின் கிங்ஸ்லி, ஷிவாங்கி, லொள்ளு சபா மாறன் உள்ளிட்டவர்களும் முக்கிமான கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்தில் துப்பறியும் நிபுணராக வடிவேலு நடித்துள்ளார்.

அனைத்து பாடல்களையும் பாடிய வடிவேலு
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள 4 பாடல்களையும் வடிவேலுவே பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடிவேலு பாடும் பாடல்கள் எப்போதுமே தனிப்பட்ட முறையில் ரசிகர்களின் பேவரிட்டாக அமையும். அந்த வகையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அனைத்து பாடல்களையும் அவர் பாடியுள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு சிறப்பான செய்தியாக அமைந்துள்ளது.
நடிகர் வடிவேலு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். உதயநிதியுடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து முடித்துள்ள அவர் தற்போது சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் படத்தில் பி வாசு இயக்கத்தில் நடித்து வருகிறார். அவரது ரீ என்ட்ரிக்காகவே காத்திருந்தது போல இயக்குநர்கள் அவரை அடுத்தடுத்து தங்களது படங்களில் கமிட் செய்து வருகின்றனர்












Discussion about this post