சென்னை: சிந்து சமவெளி படத்தில் அமலா பாலுக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். சமீபத்தில் தனது வருங்கால மனைவி நர்மதாவை சமூக வலைதளத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை திருவேற்காட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக தனது திருமணத்தை நடத்தி உள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
ஹரிஷ் கல்யாண் திருமணம் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா எனும் பெண்ணுக்கும் இன்று திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சூழ கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. மணமகன் கோலத்தில் செம அழகாக ஹரிஷ் கல்யாண் உள்ளதை பார்த்து ஏகப்பட்ட பெண்கள் ஃபீல் செய்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண், பொறியாளன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருந்தாலும், அவருக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை. அதன் பிறகு பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்ட அவருக்கும் ரைசா வில்சனுக்கும் இடையே செம கெமிஸ்ட்ரி வொர்க்கவுட் ஆனது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் இருவருமே ஜோடியாக நடித்தனர்.
இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும், ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக திடீரென அறிவித்து தனது வருங்கால மனைவி இவர் தான் என நர்மதாவை ரசிகர்களுக்கு சோஷியல் மீடியா மூலம் அறிமுகம் செய்து வைத்திருந்தார். இந்நிலையில், நர்மதாவுடன் திட்டமிட்டபடி இன்று காலை திருமணத்தை முடித்து மாப்பிள்ளையாக மாறி உள்ள ஹரிஷ் கல்யாணின் திருமண புகைப்படங்கள் வெளியாகி உள்ளன
குவியும் வாழ்த்து
சினிமாவில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்து இளம் ரசிகைகளை கவர்ந்து வந்த ஹரிஷ் கல்யாணுக்கு திடீரென திருமணம் நடைபெற்ற நிலையில், ஏகப்பட்ட ரசிகைகள் வருத்தம் அடைந்தாலும், மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களும் நடிகர் ஹரிஷ் கல்யாணை வாழ்த்தி வருகின்றனர்.













Discussion about this post