இங்கிலாந்தில் தளபதி விஜய்யின் “லியோ” திரைப்படம் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் மூலம் வெளியிடப்படுகிறது. இந்த படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம்தான் லியோ. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே மிகப்பெரிய சாதனைகளை செய்து வருகிறது. இந்தியா மட்டுமல்லாமல், உலகளவில் பல சாதனைகளை புரிந்து வருகிறது லியோ திரைப்படம். அந்த வகையில், இங்கிலாந்தில் லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே சாதனையை படைத்ததாக வெளியீட்டு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.
லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே படத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கியது.
இன்னும் படம் வெளியாக 40 நாட்களுக்கு மேல் இருக்கும் நிலையில், இங்கிலாந்தில் ஒரே நாளில் 10000+ டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. லியோ படத்தை இங்கிலாந்தில் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் விநியோகம் செய்கிறது.
முன்னதாக, தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படத்திற்கான முன்பதிவு இந்த ஆண்டு ஜனவரியில் தொடங்கியது. முன்பதிவு குறித்த அறிவிப்பு வெளியான 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 2000 டிக்கெட்டுகள் விற்பனையானது. இதுவே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், லியோ படத்தின் டிக்கெட் விற்பனை வாரிசு விற்பனையையே ஓவர்டேக் செய்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.






Discussion about this post