நேற்றைய தினம் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் ‘மார்க் ஆண்டனி’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து எஸ்.ஜே. சூர்யா பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘மார்க் ஆண்டனி’ படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் இந்தப்படம் வெளியானது. இந்நிலையில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் தனது வெறித்தனமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.
தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தற்போது நடிகராக கலக்கி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா. இவரின் நடிப்பிற்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு குவிந்த வண்ணம் உள்ளன. தொடந்து வில்லனாகும் ஏகப்பட்ட படங்களில் மிரட்டி வருகிறார் எஸ்.ஜே. சூர்யா.






Discussion about this post