ரஷ்மிகா மந்தனாவுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சனையை பார்த்தவர்களோ இது சிம்ரனுக்கு நடந்தபோதே நாம் எல்லாம் சுதாரித்திருக்க வேண்டும் என்கிறார்கள்.
விஷயம் சிம்ரனுக்கு நடந்தபோதே சுதாரித்திருந்தால் தற்போது ரஷ்மிகா மந்தனாவுக்கு நடந்திருக்காது என பேசப்படுகிறது.
தொழில்நுட்பத்தை வைத்து திரையுலக பிரபலங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். அப்படித் தான் AI மூலம் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் திருமணம் செய்து வைத்து குழந்தையும் பெற்றுவிட்டதாக காட்டினார்கள். இந்நிலையில் ரஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ வெளியாகி அனைவரையும் குறிப்பாக பெண்களை பதற வைத்துவிட்டது.
இங்கிலாந்தில் வசிக்கும் ஜாரா பட்டேலின் வீடியோவில் ரஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்திவிட்டார்கள். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஷ்மிகா மந்தனா வேதனையுடன் விளக்கம் அளித்தார். மேலும் நிஜமான வீடியோவில் இருக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலமான ஜாரா பட்டேலும் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில் தான் சிம்ரனின் Deepfake வீடியோ பற்றி பேச்சு கிளம்பியிருக்கிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் வந்த காவாலா பாடலுக்கு இரண்டு பெண்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் தமன்னா. அந்த வீடியோவில் தமன்னாவின் உடம்பில் சிம்ரனின் முகத்தை வைத்து Deepfake வீடியோ வெளியிட்டார்கள். அந்த வீடியோவை பார்த்த சிம்ரன் அதை ஷேர் செய்தவருக்கு நன்றி தெரிவித்தார்.






Discussion about this post