‘கோமாளி’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ‘லவ் டுடே’ படத்தை இயக்கி தானே நடிக்கவும் செய்தார். ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலே ரூ. 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தார். இந்நிலையில் அடுத்த படத்திற்காக பிரதீப் ரங்கநாதன் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் அனைவரும் நடிகர்களாகும் டிரெண்ட் தற்போது உள்ளது. அந்த வகையில் இயக்குனராக இருந்து தனது இரண்டாவது படத்திலே நடிகர் ஆனவர் தான் பிரதீப் ரங்கநாதன். இவர் ஹீரோவாக அறிமுகமான முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி. இப்படத்தின் வாயிலாக இயக்குனராக அறிமுகம் ஆனவர் தான் பிரதீப் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸ்களின் நாஸ்டாலஜியை தூண்டும் விதமாக வெளியான ‘கோமாளி’ படம் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.
இதனையடுத்து தனது இரண்டாவது படமாக லவ் டுடேவை இயக்கினார். இப்படத்தின் வாயிலாக கோலிவுட்டில் ஹீரோவாகவும் அறிமுகம் ஆனார். இவானா நாயகியாக நடித்த இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், ரவீனா ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் இணைந்து நடித்திருந்தனர். ‘லவ் டுடே’ படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடி வரை வசூலித்தது.
ஹீரோவாக அறிமுகமான முதல் படத்திலே வசூல் சாதனை படைத்து மாஸ் காட்டினார். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மீண்டும் ஹீரோவாகவே நடிக்கும் முடிவில் இருக்கிறார். தானே இயக்கி நடிக்காமல், அடுத்த இயக்குனர்களின் படத்தில் நடிப்பதற்காக கதை கேட்டு வந்தார். இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.






Discussion about this post