ஹமாஸ் போராளிகளை ஒழிக்கும் வரை போர் ஓயாது என காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி வந்தது. கட்டார், எகித்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் பணயக்கைதிகளை விடுவிக்கும் வகையில் போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டன.
இதன் பயனாக இலங்கை நேரப்படி கடந்த வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அதற்குப் பதிலாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவித்தது. ஒரு பணயக்கைதிக்கு மூன்று பலஸ்தீனர்கள் என்ற அடிப்படையில் பரிமாற்றம் நடைபெற்றது.





Discussion about this post