Monday, April 27, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

3 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய டிவி… அதற்கு முன் அமர்ந்திருந்த அந்த பெண்!

by editor
February 22, 2026
in உலகம்
0 0
A A
0
3 ஆண்டுகள் தொடர்ந்து இயங்கிய டிவி… அதற்கு முன் அமர்ந்திருந்த அந்த பெண்!
Share on FacebookShare on Twitter

வெளியிலிருந்து பார்த்த அனைவரும், அவள் டிவி பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று நினைத்தனர். ஆனால் அந்த டிவி 3 ஆண்டுகளாக நின்றதே இல்லை என்றும், அதன் முன் அவள் உயிருடன் அமர்ந்திருக்கவில்லை என்றும் உலகம் அறிந்தது மிகவும் தாமதமாகத்தான்!

லண்டன் நகரத்தின் பரபரப்பான வாழ்க்கைக்குள், ஒரு குடியிருப்பில் மூன்று ஆண்டுகள் உலகத்தால் மறக்கப்பட்ட ஒரு இளம் பெண் – Joyce Carol Vincent.

அவர் மரணிக்கும் போது வயது 38. அழகாகப் பாடக்கூடியவர், பெரிய நிறுவனங்களில் வேலை செய்தவர். ஆனால் 2003 டிசம்பரில் அவர் இறந்தபோது, அந்த செய்தி வெளி உலகிற்கு தெரிய 2006 ஜனவரி 25 வரை காத்திருக்க வேண்டி வந்தது!

மூன்று ஆண்டுகள் அந்த வீட்டில் டிவி இயங்கிக் கொண்டே இருந்தது. ஜன்னல் வழியாக தெரிந்த அந்த ஒளியைப் பார்த்து, ஜோய்ஸ் உள்ளே இருப்பார் என்று அயலவர்கள் நினைத்தனர்.

கிறிஸ்துமஸ் பரிசுகளை மூடிக்கொண்டிருந்தபோதே அவர் மரணமடைந்தார். கண்டுபிடிக்கப்பட்ட போது, கையில் பாதியாக மூடப்பட்ட பரிசுப் பொதியும் இருந்தது.

வங்கி கணக்கிலிருந்து தானாகவே வீட்டு வாடகையும் மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதால், யாருக்கும் சந்தேகம் வரவில்லை. இறுதியில் வாடகை நிலுவையாகியபோது வீட்டைத் திறந்து பார்த்தபோதுதான், எலும்புக்கூட்டாக மாறிய நிலையில் ஜோய்ஸ் கண்டுபிடிக்கப்பட்டார்.

வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தையும் அயலவர்கள் குப்பை குழாயிலிருந்து வருவதாக நினைத்து புறக்கணித்தனர்.

மிகவும் சோகமான விஷயம் என்னவென்றால் – அவருக்கு குடும்பமும் நண்பர்களும் இருந்தனர். ஆனால் மெதுவாக எல்லோரிடமிருந்தும் அவர் விலகிப் போயிருந்தார். பெரிய நகரங்களில் மனிதர்கள் எவ்வளவு “Invisible” ஆக மாறக்கூடும் என்பதற்கான அதிர்ச்சிகரமான உதாரணம் தான் ஜோய்ஸ்.

இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ‘Dreams of a Life’ என்ற ஆவணப்படமும் வெளியாகியுள்ளது.

Related Posts

இன்று உலக மலேரியா தினம்
உலகம்

இன்று உலக மலேரியா தினம்

April 25, 2026
ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்
உலகம்

ஈரானுடான போர் நிறுத்தத்தை மேலும் நீடித்தார் ட்ரம்ப்

April 22, 2026
அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!
உலகம்

அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

April 14, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு

மலையக மகிழ்ச்சி” திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் புதிய வீடு

April 27, 2026
மின்னலுக்கான எச்சரிக்கை!

மின்னலுக்கான எச்சரிக்கை!

April 27, 2026
இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

April 27, 2026
இரண்டு வயது குழந்தையை விற்று மொபைல்  வாங்கிய குற்றச்சாட்டில் தாய்  கைது!

இரண்டு வயது குழந்தையை விற்று மொபைல் வாங்கிய குற்றச்சாட்டில் தாய் கைது!

April 27, 2026

Recent News

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version