- கிழக்கில் பல தடவைகள் மழை
- நாளை மற்றும் மறுதினம் மழை அதிகரிக்கும் சாத்தியம்
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்றையதினம் (06) குறைந்த அழுத்தமாக விருத்தியடைந்து, வடமேற்கு நோக்கி நகர்ந்து (இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் நகர்ந்து) படிப்படியாக சூறாவளியாக உருவடைந்து, தென்மேற்கு வங்காள விரிகுடா ஊடாக, நாளைமறுதினம் 08 ஆம் திகதி தமிழகக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இத்தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் நாளை (07), நாளை மறுதினம் (08) மழை நிலைமையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இன்றையதினம் (06) நாட்டின் கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.





Discussion about this post