ஈரானில் இடம்பெற்று வரும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புபட்டு ஆர்ப்பாட்டக்காரர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட முதல் சம்பவம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
“கடவுள் மீதான பகை” தொடர்பான குற்றச்சாட்டில் புரட்சி நீதிமன்றம் ஒன்றினால் குற்றங்காணப்பட்ட மொஹ்சன் ஷெகாரி வியாழக்கிழமை (நேற்று) துக்கிலிடப்பட்டார் என்ற அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் 25ஆம் திகதி டெஹ்ரானில் உள்ள பிரதான வீதி ஒன்றை முடக்கி படையினர் மீது கத்தியால் தாக்குதல் நடத்திய ‘கலகக்காரர்’ என அவர் குற்றங்காணப்பட்டுள்ளார். எந்த ஒரு முறையான செயல்முறையும் அற்ற விசாரணை ஒன்றுக்கு பின்னரே அவர் குற்றங்காணப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹிஜாப் அணியாததற்காக தடுப்புக் காவலில் இருந்த 22 வயது மஹ்சா அமினி என்ற பெண் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த செப்டெம்பர் நடுப்பகுதியிலேயே ஈரானில் ஆர்ப்பாட்டம் வெடித்தது. இந்த ஆர்ப்பாட்டங்களுடன் தொடர்புபட்ட 11 பேருக்கு இதுவரை மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Discussion about this post