நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் சீரான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இன்று அதிகாலை வேளையில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன் நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் பனித்துளிகள் காணக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
அத்துடன் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 20 – 30 கிலோ மீற்றரில் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.





Discussion about this post