உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கோரும் வர்த்தமானி இந்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி வெளியிடப்பட்டு மூன்று நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் சட்டத்திற்கு அமைய எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






Discussion about this post