உத்தேச சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான மூன்றாவது சுற்று கலந்துரையாடலையை ஜனவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இலங்கை மற்றும் தாய்லாந்து நடத்தவுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது, இருதரப்பு வர்த்தக மதிப்பு 550 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது,இலங்கை சுமார் 50 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதாகவும், எதிர்வரும் பேச்சுவார்த்தையின் போது, தாய்லாந்தில் இருந்து விவசாயம் மற்றும் மீன்பிடி துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான வழிகளை தேடும் என சர்வதேச வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பான இலங்கையின் பிரதான பேச்சாளர் கே.ஜே. வீரசிங்க தெரிவித்துள்ளார்.
“உற்பத்தியை அதிகரிக்க தாய்லாந்தில் இருந்து முதலீடுகளை ஈர்க்க வேண்டும்,” எனவும்,. தாய்லாந்திற்கான ஏற்றுமதி பொருட்களை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post