கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (10) காலை கட்டாரில் இருந்து வந்த இவர் வருகை முனையத்தில் தரையில் விழுந்து இறந்துள்ளார். 55 வயதான இவர் கனடாவை வசிப்பிடமாகக் கொண்டவர் என்பதுடன் பிடகொட்ட பிரதேசத்தில் உள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக இந்த நாட்டிற்கு வந்துள்ளார்.
Discussion about this post