இந்த மாதத்திற்கான ஓய்வூதிய கொடுப்பனவிற்கான பணம் இன்று(புதன்கிழமை) வங்கிக் கணக்குகளுக்கு விடுவிக்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
திறைசேரியின் நிதி நிலை காரணமாக வங்கிகளுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஓய்வூதியத்திற்காக மாதாந்தம் சுமார் 26 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாகவும் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சமுர்த்தி உள்ளிட்ட அரச மானியங்களுக்கு தேவையான பணத்தை குறிப்பிட்ட திகதிகளில் வழங்குவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.




Discussion about this post