சபையில் சபாநாயகர் அறிவிப்பு
தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானதல்ல எனவும் அதனை பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றிக்கொள்ள முடியுமென்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று சபாநாயகரின் அறிவிப்பின் போதே சபாநாயகர் இவ்வாறு தெரிவித்தார். அரசியலமைப்பின் 121 -1 சரத்துக்கமைய உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டிருந்த தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. உயர் நீதிமன்றத்தினால் சட்டமூலத்தின் விதிமுறைகள் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பின்னர் உயர் நீதிமன்றத்தின் தீரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் திருத்தங்களின் கீழ் சட்டமூலத்தின் விடயங்கள் எதுவும் அரசியலமைப்புக்கு முரணாக அமைவதில்லை எனவும் பாராளுமன்றம் சாதாரண பெரும்பான்மையுடன் தேர்தல் செலவு ஒழுங்குபடுத்தல் சட்டமூலத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளது என்றும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.






Discussion about this post