சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 23 முதல் 27 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அமைச்சர் பர்ஹான் அல் சவுத்தை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடவுள்ளார். இஸ்லாமிய மேம்பாட்டு அபிவிருத்தி வங்கி, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, வளைகுடா ஒத்துழைப்பு பேரவை, மக்கா மற்றும் மதீனா ஆளுநர்களையும் அமைச்சர் சந்திக்கவுள்ளார்.
Discussion about this post