அரசாங்க வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களின் எண்ணிக்கை 25 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தனியார் துறையின் மருந்து மற்றும் சிகிச்சைகளின் விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஆய்வக சோதனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருப்பதோடு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுமார் 100 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.






Discussion about this post