இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பில் ஒத்துழைப்பதற்கான உடன்படிக்கையொன்றில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரும் பனாமா வெளிவிவகார அமைச்சர் ஜனைனா டெவானே மென்கொமோவும் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவின் 17 ஆவது பிரவாசி பாரதிய திவாஸ் விழா இந்தூரில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்குபற்றிய பனாமா வெளிவிவகார அமைச்சரும் இந்திய வெளிவிவகார அமைச்சரும் இவ் உடன்படிக்கையில் சைச்சாத்திட்டுள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சர் ஜெய்சங்கர் விடுத்துள்ள ட்வீட்டில், “எங்களது இராஜதந்திரிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரம் இச்சந்திப்பின் போது பாரிய பொருளாதார வாய்ப்புகள், சுகாதாரம், மக்களுக்கு இடையிலான தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளன. ஜனநாயக நாடுகள் என்ற வகையில் உலகளாவிய நிலவரங்கள் தொடர்பிலும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்” என்றுள்ளார்.




Discussion about this post