க.பொ.த உயர்தரப் பரீட்சையில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் உயர்தரப் பரீட்சை மோசடிகள் எதுவுமின்றி நடைபெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பரீட்சை முறைகேடுகள்
மின்சாரத் தடை உள்ளிட்ட சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பரீட்சை முறைகேடுகள் அல்லது வேறு முறைப்பாடுகள் இன்றி இம்முறை பரீட்சை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
வரையறுக்கப்பட்ட மாணவர்கள் மட்டும் தோற்றும் பரீட்சைகள் எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் 22ம் திகதி ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 17ம் திகதி உயர்தரப் பரீட்சை நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.






Discussion about this post