இலங்கை நெருக்கடியான நிலையிலிருந்து மீளும் வரை, அமெரிக்கா துணை நிற்குமென அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். இந்தோ-பசிபிக் வலயம் தொடர்பான புதிய அணுகுமுறை குறித்த நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் இலங்கையும் ஒன்று. இந்த வகையில் இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலைக்கு அமெரிக்கா துணை நிற்குமென்றார்.
இவ்வைபவத்தில், அமெரிக்க இராணுவ மற்றும் தூதரக உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.




Discussion about this post