கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு 2,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அது தொடர்பில் நேற்று (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகாரிகள் ஒன்லைன் மூலமாக விண்ணப்பிப்பதற்கான காலம் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்தும் நடவடிக்கையின்போது, திருத்த வேலைகளில் ஈடுபடும் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட நிலையில், அதற்குத் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கான கொடுப்பனவை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.




Discussion about this post