கொட்டகலை நகரிலுள்ள தளபாட விற்பனை நிலையம் ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் முயற்சியில் பொதுமக்களும், பொலிசாரும் தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு வர்த்தக நிலையங்களுக்கு தீ பரவி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை என்றாலும், மின்னொழுக்கின் காரணமாக தீ பரவி இருக்கலாம் என சந்தேகிப்பதாக கொட்டகலை பொலிசார் தெரிவித்தனர்.




Discussion about this post