பத்து பேருடன் காணாமல்போன ஜப்பான் இராணுவ ஹொலிகொப்டர் ஒன்று ஒகினாவா கடற்பகுதியில் விழுந்திருப்பதாக நம்பப்படுகிறது.
மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையின்போது இந்த ஹெலியினுடையது என்று சந்தேகிக்கப்படும் பாகங்கள் மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “இந்த ஹெலி விபத்துக்கு முகம்கொடுத்திருப்பதாக நாம் நம்புகிறோம்” என்று ஜெனரல் யசுனோரி மொரிசிட்டா டோக்கியோவில் வைத்து தெரிவித்துள்ளார்.
பிளக் ஹவுக் என்று அறியப்படும் யு.எச்60 ஹொலிகொப்டர் மியாகோ தீவுகளுக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை ராடார் திரையில் இருந்து காணாமல்போனது. ஜப்பானில் தரைத் தற்காப்புப் படையினராலேயே இந்த ஹெலி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது எண்ணெய் கசிவு மற்றும் ஹெலியின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனினும் அது காணாமல்போன ஹெலியினுடையது என்பது உடன் உறுதி செய்யப்படவில்லை.
ஹெலிகொப்டரில் 10 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களது உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜப்பானியப் பிரதமர் பூமியோ கிஷிடா குறிப்பிட்டார்.





Discussion about this post