Tuesday, May 19, 2026
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
  • உலகம்
  • பிரித்தானியா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish
No Result
View All Result
  • தமிழ்
  • සිංහල
  • English
Home உலகம்

லெபனான், காசா மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் கடும் தாக்குதல்

by editor
April 9, 2023
in உலகம்
0 0
A A
0
கராப்பிட்டி வைத்தியசாலை புற்றுநோய் பிரிவில் திடீர் தீப்பரவல்
Share on FacebookShare on Twitter

பலஸ்தீன போராட்டக் குழுவான ஹமாஸ் அமைப்பை இலக்கு வைத்து காசா மற்றும் லெபனானில் இஸ்ரேல் நேற்று (07) அதிகாலை சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த இரு பகுதிகளில் இருந்தும் இஸ்ரேல் மீது ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதில் நடவடிக்கையாகவே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

தெற்கு லெபனானில் ஹமாஸ் ‘பயங்கரவாதிகளின்’ கட்டமைப்பு ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசல் மீது இஸ்ரேலியப் படை இந்த வார ஆரம்பத்தில் தொடர்ச்சியாக இரு தினங்கள் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்தே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்தப் பள்ளிவாசல் முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலம் என்பதோடு இந்த சுற்றிவளைப்பு பலஸ்தீனத்திலும் பிராந்தியத்திலும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்படும்போது ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே லெபனானில் இருந்தார். “இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முன்னால் பலஸ்தீனர்கள் தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கமாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை நேற்று வெள்ளிக்கிழமை காலை வெளியிட்ட அறிவிப்பில், தெற்கு லெபனானில் ஹமாஸுக்கு சொந்தமான பயங்கரவாதக் கட்டமைப்பு உட்பட இலக்குகளை தாக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து ஹமாஸ் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்றும் அங்கிருந்து இயக்கப்படும் ஒவ்வொரு தாக்குதல்களுக்கும் லெபனான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

லெபனானில் இருந்து கடந்த வியாழக்கிழமை வீசப்பட்ட ஏவுகணைகள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் வடக்கு அண்டை நாடான லெபனானில் இருந்து கடந்த 17 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஒற்றைத் தாக்குதலாக இது பதிவாகியுள்ளது. அங்கிருந்து 34 ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாகக் குறிப்பிட்டிருக்கும் இஸ்ரேல், ஐந்து குண்டுகள் கட்டடங்களுக்கு சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலிய போர் விமானங்கள் காசா மீது தாக்குதல் நடத்தியதோடு சுமார் 20 ஏவுகணைகள் கொண்டு 10 நிமிடங்களில் நான்கு புதிய தளங்கள் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. பலஸ்தீன போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது புதிய சுற்று ரொக்கெட் குண்டுகளை வீசியதோடு இதனையொட்டி இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டது.

இஸ்ரேலிய ஜெட்கள் நிலத்தடி ஆயுத உற்பத்தி தளம் ஒன்றின் மீதும் நிலத்தின் மேலுள்ள மூன்று தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஓகஸ்டில் இஸ்லாமிய ஜிஹாத்துடனான மோதலுக்குப் பின் இஸ்ரேல் நடத்திய தீவிர வான் தாக்குதலாக இது உள்ளது.

இஸ்ரேல் பிரதமர் நடத்திய அவசர அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்தே இந்த பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நெதன்யாகுவின் உரையில் அவர் கூறியதாவது, “நாம் எதிரிகளை தாக்குவோம் என்பதோடு அனைத்து வகையான தாக்குதல்களுக்காகவும் அவர்கள் விலை கொடுப்பார்கள்” என்றார். “வன்முறையை பயன்படுத்தும் கடும்போக்காளர்களுக்கு எதிராக நாம் தீர்க்கமாகச் செயற்படுவோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமது நாட்டுக்குள் இருந்து செயற்பாடும் எந்த ஒரு ஆயுத நடவடிக்கையையும் கண்டிப்பதாகக் குறிப்பிட்ட லெபனான் பிரதமர் நபில் மிகாதி, “அது நிலைமையை ஸ்திரமற்றதாக மாற்றும்” என்று எச்சரித்தார்.

லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படை, நிலைமை தீவிரமாக உள்ளதாகவும் மேலும் தீவிரம் அடைவதை தவிர்க்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

அல் அக்ஸா பள்ளிவாசலில் இடம்பெற்ற மோதல்களை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராக செயற்படும் பலஸ்தீன போராளிகளின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு அளிப்பதாக லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்திருந்தது.

ஹிஸ்புல்லா அமைப்பு ஹமாஸ் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளது.

லெபனான் மீதான வான் தாக்குதல் ஹிஸ்புல்லா அமைப்பை மோதலுக்குள் இழுக்கும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. அவ்வாறான ஒரு மோதல் போருக்கு இட்டுச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லா இஸ்ரேலை பெரும் எதிரியாகப் பார்க்கிறது. எனினும் ஹமாஸ் அமைப்பை இலக்கு வைத்தே லெபனானில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கவனமாக அறிவித்துள்ளது.

எனினும் ஹிஸ்புல்லாவின் அனுமதியுடனேயே லெபனானில் இருந்து ஹமாஸ் தாக்குதல் நடத்தி இருக்கக் கூடும் என்று இஸ்ரேலிய பாதுகாப்பு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் -மற்றும் ஹிஸ்புல்லா இடையே 2006ஆம் ஆண்டு வெடித்த போர் ஒரு மாத காலம் நீடித்தமை குறிப்பிடத்தக்கது.

அல் குலைலா மற்றும் மேலும் இரு எல்லை கிராமங்களான டைரே மலியா மற்றும் சிப்கினுக்கு அருகில் இருந்தே ரொக்கெட் குண்டுகள் ஏவப்பட்டிருப்பதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது. ஏவு கருவிகள் மற்றும் வீசப்படாத ரொக்கெட் குண்டுகளின் படங்களை வெளியிட்டிருக்கும் லெபனான் இராணுவம் அவை குறித்த பகுதிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இராணுவ நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது. ‘இப்போது மோதலை விரிவுபடுத்த யாரும் விரும்பவில்லை’ என்று இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

‘அமைதி நிலைக்கு அமைதியால் பதிலளிக்கப்படும். தற்போதைய நிலையிலும் எதிர்வரும் மணி நேரங்களிலும் இந்த நிலை நீடிக்கிறது’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

மீண்டும் யுத்தம்?
உலகம்

மீண்டும் யுத்தம்?

May 5, 2026
எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!
உலகம்

எண்ணெய் சுத்திகரிப்பு தடை – சீனா எதிர்ப்பு!

April 27, 2026
இன்று உலக மலேரியா தினம்
உலகம்

இன்று உலக மலேரியா தினம்

April 25, 2026
Load More

Discussion about this post

  • Trending
  • Comments
  • Latest

கற்றறிந்த நிபுணர்களை உருவாக்கும் நோக்கில்,நோதன் கம்பஸ் திறந்து வைப்பு.

October 28, 2022

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச நிறுவனம்!

0
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று ஆரம்பம்

0
‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

‘பசுமை தமிழகம்’ இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் மு.க.ஸ்டாலின்

0
கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

கேரளாவில் முழு அடைப்புப் போராட்டத்தில் வன்முறை – 900 பேர் கைது

0
இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Recent News

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

இன்று முதல் வாகனங்களுக்கான இறக்குமதி சுங்கத் தீர்வை மீது 50% கூடுதல் கட்டணம் அறவிடப்படும்

May 16, 2026
ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

ஸ்டாலின் வீட்டுக்கு வந்த முதல்வர் விஜய்…

May 11, 2026
பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

பிரசவத்தின் போது சிசு மரணம்: பெண் வைத்தியர் உட்பட இருவர் பணி இடைநீக்கம்..!

May 11, 2026
நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

நீர்க் கட்டணங்களும் உயர்கின்றன..

May 11, 2026

Follow us

  • facebook
  • twitter
  • instagram
  • youtube
  • தமிழ்தமிழ்
  • සිංහලසිංහල
  • EnglishEnglish

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

No Result
View All Result
  • இலங்கை
  • இந்தியா
  • பிரித்தானியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • அறிவியல்
  • ஆன்மீகம்
  • அறிவித்தல்
  • வேலைவாய்ப்பு

©2022 newsinfirst.com ALL RIGHTS RESERVED

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version