கிரிவுல்ல பிரதான வீதியில் அமைந்திருந்த பட்டாசு கடை ஒன்றில் நேற்று மாலை(13.04.2023) தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பட்டாசு கடைக்கு அருகில் சிலர் பட்டாசுகளை கொளுத்தியபோது ஒரு பட்டாசு, கடைக்குள் சென்று வெடித்தமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அனைத்தும் வெடித்து தீக்கிரையாகியுள்ளதுடன் உயிர்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தீ விபத்து ஏற்படுவதற்கு காரணமானவர்கள் தப்பி சென்றுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






Discussion about this post