மினுவாங்கொடை தனியார் பாடசாலை ஒன்றில் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி ஆசிரியை ஒருவரை வலுக்கட்டாயமாக கட்டித்தழுவிய அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடவத்தையில் வசிக்கும் 61 வயதுடைய அதிபர், இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிய வந்துள்ளது.
குறித்த பாடசாலையில் ஆங்கில ஆசிரியையான 23 வயதுடைய பெண் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்றைய தினத்திற்கான பணிகளை முடித்துவிட்டு பாடசாலையை விட்டு வெளியேற தயாராக இருந்த நிலையில் புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி சந்தேகநபர் பலவந்தமாக தம்மை அரவணைத்ததாக ஆசிரியை தனது முறைப்பாட்டில் கூறியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.




Discussion about this post