கொழும்பின் புற நகர் பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை (29) பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி காலை 11 மணி முதல் இரவு 9 மணிவரை நீர் வெட்டு அமுலாகவுள்ளது.
👉கொலன்னாவ நகரசபை பகுதி,
👉மொரகஸ்முல்ல,
👉ராஜகிரிய,
👉ஒபேசேகரபுர,
👉பண்டாரநாயக்கபுர,
👉அத்துல்கோட்டே,
👉நாவல,
👉கொஸ்வத்தை மற்றும்
👉ராஜகிரியவில் இருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையான பிரதான வீதி மற்றும் அதனுடன் இணைந்த அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.
கொலன்னாவ நீர்விநியோக நிலையத்தின் பிரதான கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Discussion about this post