எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணம் திருத்தம் செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் 2022 டிசம்பரில் எடுக்கப்படும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைய உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதற்கமைய, செலவு அடிப்படையிலான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அதை மறுபரிசீலனை செய்யவும், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.




Discussion about this post