இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் 2 ஆயிரத்து 755 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்தில் உத்தியோகபூர்வ கையிருப்பு 2 ஆயிரத்து 694 மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 2.2 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக, தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துகளில் சீனாவின் மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இடமாற்று வசதியும் அடங்கியுள்ளதாகவும், இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




Discussion about this post