க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் 12 பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஏனைய அனைத்துப் பாடங்களுக்குமான விடைத்தாள் திருத்தும் பணிகளை முழுமையாக முன்னெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் இந்த வாரத்திற்குள் விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள் வழமையான முறையில் நடத்தப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அதுதொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக இதுவரை தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.




Discussion about this post