நாட்டில் பல பகுதிகளில் இன்று (புதன்கிழமை) 75 மில்லிமீட்டர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல், சபரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் கூறியுள்ளது.
இதேவேளை, பதுளை, காலி, கண்டி,கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட முதற்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Discussion about this post