அனர்த்த நிலைமைகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீட்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி காலி, மாத்தறை, இரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் முப்படைகள், பொலிஸ் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் சாகல ரத்நாயக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




Discussion about this post