தமிழ்நாடு மண்டபத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 22 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் உள்ள மகிளா நீதிமன்றம் இலங்கை நபருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தது.
தமிழ்நாடு மண்டபத்தில் உள்ள புனர்வாழ்வு முகாமில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த 52 வயதான குற்றவாளி, 2022 ஜனவரியில் சிறுமியை தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
அபராதத்தை செலுத்தத் தவறினால் குற்றவாளி மேலும் 6 மாதங்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவருக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்க பரிசீலிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.




Discussion about this post